நாகர்கோவில், ஆக.18- ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து ஆட்டோ தொழிலா ளர்களுக்கும் மாதம் ரூபாய் 7500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆட்டோக்களுக்கான எப்சி, இன்சூரன்ஸ், பர்மிட், சாலை வரி, உரிமம் புதுப்பிப்பதற்கான காலத்தை லாக் டவுன் முடியும் நாளில் இருந்து ஓராண்டுக்கு நீடிக்க வேண்டும், வங்கிகளில் இருந்து பெறப்பட்ட வாகன கடனுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், கொரோனா காலத்தில் ஆட்டோக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுவதுடன், ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டார், கொல்லங்கோடு, முஞ்சிறை, கிள்ளியூர், தக்கலை, திருவட்டார், மேல்புறம் உட்பட மாவட்டம் முழுவதும் 58 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது நாகர்கோவில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் மரிய ஸ்டீபன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலா ளர் பொன்.சோபனராஜ், மாவட்ட பொருளாளர் மோகன், மாவட்ட நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் திரளாக கலந்து கொண்டனர்.