tamilnadu

img

மாதம் ரூ.7,500 வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம் - கைது

திண்டுக்கல், மே 14- கொரோனா வைரஸ் நோய் தொற்றை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவ லர்கள், உள்ளிட்ட அனை வருக்கும் காப்பீடு செய்திட வேண் டும். 8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக மாற்றாதே, கொரா னாவால் வேலையிழந்த தொழி லாளர்களுக்கு மாதம் ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி திண்டுக்கல் மாவட்ட சிஐடியு அலுவலகம் முன்பு கே.ஆர்.கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 25 பேர் கலந்து கொண்டனர். 11 பேர் கைது செய்யப்பட்டனர்.  மேட்டுப்பட்டியில் கே. பிரபா கரன் தலைமையில் நடந்த ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்ற 40 பேர் கலந்து கொண்டனர். பஸ்நிலை யம் அருகில் ஆர்.பால்ராஜ் தலை மையில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் 40 பேரில் 30 பேர் கைது செய்யப் பட்டனர். மின்வாரிய அலுவலகம் முன்பு உமாபதி தலைமையில் 15 பேரும், பழனியில் சோ. மோகனா தலைமையில் 30 பேரும், ஒட்டன்சத்திரத்தில் முரு கேசன் தலைமையில் 15 பேரும், குஜிலியம்பாறையில் பாலசுப்பிர மணி தலைமையில் 27 பேரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.