அருமனை, மே 19- குமரி மாவட்டம் அருமனை அருகில் உள்ள மாறப்பாடி யைச் சேர்ந்த ராஜகுமால் (48) துபாயில் வேலை பார்த்து வந்தார். கட்டுமான தொழிலாளி யான இவர் கொவிட் 19 நோய் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார். இவரது மனைவி லதா புஷ்பம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகள் பியூட்டி லின் ரென்சி (20), அட்வின் ராகுல் (18) ஆகியோர். புற்றுநோயால் அவதிப்படும் பாட்டியின் பரா மரிப்பில் உள்ளனர். ராஜகுமார் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஆர். லீமாறோஸ் அருமனை வட்டா ரக்குழு செயலாளர் சி.சசிக்குமார் உள்ளிட்டோர் ஞாயிறன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி னர். தாய்,தந்தையை இழந்து புற்றுநோயால் வாடும் பாட்டி யின் பராமரிப்பிலுள்ள அவரது இருகுழந்தைகளின் எதிர்கா லத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசின் கருணை அடிப்ப டையிலான நிதிஉதவியும் அரசுப்ப ணியும் வழங்க வேண்டும் என லீமாறோஸ் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ,தமிழக முதலமைச்சரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.