புதுதில்லி, மார்ச் 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தலைமையிலான கட்சியின் தூதுக்குழு மற்றும் தில்லி ஒருமைப்பாடு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக் குழு உறுப்பினர்கள் தில்லிவன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து வெள்ளிக்கிழமையன்று ஆறுதல் கூறினார்கள்.
மேலும் சீத்தாராம் யெச்சூரி, கலவரத்தில் பாதிப்புக்கு உள்ளான ஃபைசான், பிரேம் சிங், முகமது ஷபான், அஸ்ஃபாக் ஹுசேன் மற்றும் அலி அமிர் கான் குடும்பத்தினருக்கு நிதி உதவியும் அளித்தார்.
தூதுக்குழுவில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மத்தியக் குழு உறுப்பினரும் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவருமான அசோக் தாவ்லே, தில்லி மாநில செயலாளர் கே.எம். திவாரி, அனுராக் சக்சேனா, பூல்காந்த் மிஸ்ரா முதலானோரும் இடம் பெற்றிருந்தார்கள். பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை அளித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தில்லி ஒருமைப்பாடு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக் குழுவும் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது. (ந.நி.)