நாகர்கோவில், ஜூலை.6- கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவிட் 19 தொற்று அதிகரித்து வரும் நிலையில் கோவிட் 19 தொற்று நோயாளிகள் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு. சிகிச்சைய ளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அனுமதிக் கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அரசு அறி வித்துள்ள பட்டியலின் படி உணவு வழங்கப் படாததுடன், உரிய நேரத்திலும் வழங்கப்பட வில்லை. இதுகுறித்து பலமுறை மருத்துவ மனை நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இங்குள்ள நோயாளிகளுக்கு போதுமான இட வசதிகளும் செய்து கொடுக்கப்பட வில்லை. இந்நிலையில் ஞாயிறன்று காலை 10.30 மணிக்கு தான் காலை உணவு வழங்கப் பட்டது. மாலை 4 மணிவரை மதிய உணவு வழங்கப்படாததால் வார்டில் இருந்து வெளியே வந்து கொரோனா நோயாளிகள் போராட்டம் நடத்தினர். சிறு குழந்தைகள் முதல் சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்ட பலவகை நோயாளிகளும் முதியோர்களும் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முறையான நேரத்திற்கு உணவு வழங்கப்படாததனை கண்டித்தும், மாவட்ட ஆட்சித் தலைவரும், மருத்துவ கல்லூரி நிர்வாகமும் நோயாளிகளுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வும், சரியான நேரத்தில் நோயாளிகளுக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாநகர குழு உறுப்பி னர் பெஞ்சமின் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், மாவட்டகுழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, மாநகர செயலாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.