நாகர்கோசுவில், அக்.12- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் மு.சுப்பிர மணியனை பணி ஓய்வு நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும், முன்னாள் மாநில துணைத் தலைவர் கரூர் மு.சுப்பிரமணி யன் உள்ளிட்ட 5 பேரின் தற்காலிக பணிநீக்க உத்த ரவை ரத்து செய்ய வேண் டும், கோவை மாவட்ட தலை வர் செந்தில் குமார் மற்றும் 3 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களின் மாவட்ட மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோ வில் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சி.ஆர்.ராஜ் குமார், எம்ஆர்பி செவி லியர் மேம்பாட்டு சங்க பொதுச்செயலாளர் சுபின், மாநகராட்சி, நகராட்சி ஊழி யர் சங்க மாநில துணை தலை வர் லீடன்ஸ்டோன், அரசு ஊழியர் சங்க மாநில செய லாளர் கிறிஸ்டோபர் ஆகி யோர் பேசினர். மாவட்ட இணைசெயலாளர் விஜய குமார் நன்றி கூறினார்.