tamilnadu

img

கோவிட் கால நிவாரணம் ரூ.12,500 வழங்கிடக் கோரி குமரியில் 200 இடங்களில் சிடபிள்யுஎப்ஐ ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூலை 13- கோவிட் 19 தொற்று தடுப்பு ஊரடங்கு காலத்தில் வேலையில்லாமல் தவிக்கும் கட்டு மான தொழிலாளர்களுக்கு வேலையில்லா கால நிவாரணமாக ரூ.12 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி திங்களன்று குமரி மாவட்டத்தில் நாகர் கோவில் ராமன்புதூர், வெட்டூர்ணிமடம், கிருஷ் ணன்கோவில், முஞ்சிறை, இராஜாக்கமங்க லம், அஞ்சுகண்ணுகலுங்கு உட்பட 200 க்கும் மேற்பட்ட இடங்களில் சிடபிள்யுஎப்ஐ- சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு தழுவிய அளவில் இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் –சிஐடியு விடுத்தி ருந்த அழைப்பைத் தொடர்ந்து  நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் செல்லப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.பி.பெருமாள், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், நிர்வா கிகள் எஸ்.அந்தோணி, மாணிக்கவாசகம், அஸீஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கண்காணிப்பு குழு கூட்டத்தை தனிமனித இடைவெளியுடன் மாதம் ஒரு முறை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் விலை நிர்ணயம் செய்ய முத்தரப்பு குழு கூட்டத்தை நடத்த வேண்டும், ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்களுக்கு கோவிட் 19 நிவாரணம் ரூபாய் 5 ஆயிரம் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.