tamilnadu

img

சமூக ஊடகங்களில் பரவிய தகவலால் நடவடிக்கை சிறுமியை தாக்கிய டியூசன் ஆசிரியை மீது வழக்கு

நாகர்கோவில், செப்.23- குமரி மாவட்டத்தில், பேஸ்புக், வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைத் தளங்களில், 5 வயது மதிக்கத்தக்க பள்ளி சிறுமியின் முதுகில் கம்பால் அடிக்கப் பட்டதில் ஏற்பட்ட ரத்த கட்டும்,  கை விரல் கிழிந்த நிலையில் காணப்படும் படங்களும் வெளியாயின. சமூக வலை தளங்களில் வைரலாகும் படத்தில் காணப்படும் அந்த மாணவி பெத்தேல் புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி யில் படித்து வருவதும் தெரியவந்தது. வெள்ளியன்று, பள்ளி சென்ற சிறுமி  கடுமையான உடல் வலியால் தேர்வெ ழுத முடியாமல் தவித்ததாக கூறப்படு கிறது. அச்சிறுமியிடம் பள்ளி ஆசிரி யர்கள் விசாரித்த போது, சிறுமியின் தாயாரின் தோழி டியூஷன் சென்டர் நடத்தி வருவதாகவும், அந்த  டியூஷன் சென்டரில் படிக்க சென்றபோது கடுமை யான முறையில்  தாக்கப்பட்டது குறித்த தகவல்களை தெரிவித்தார்.  இந்நிலையில், மாவட்ட குழந்தை கள் நல பாதுகாப்பு அலுவலர் குமுதா தலைமையிலான அதிகாரிகள், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, சிறுமி படித்த பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, தற் போது காலாண்டு தேர்வு நடந்து வரு கிறது.  இதற்காக, வியாழனன்று  பள்ளி யில் தேர்வு எழுதிய போது அறை யிலேயே மயங்கி  விழுந்ததாகவும், டியூசன் ஆசிரியை அதிக மதிப்பெண் எடுக்க துன்புறுத்தி, தன்னை ஸ்டீல் அகப்பை, கம்பால் தாக்கியதாக, சிறுமி தங்களிடம் தெரிவித்ததாக ஆசி ரியர்கள் காவல் துறையினரிடம் தெரி வித்தனர். இதையடுத்து சிறுமி என்றும் பாராமல் கொடூரமாக தாக்கிய டியூ சன் ஆசிரியை ஜெசிமோள் (40) மீது வழக்கு பதிவு செய்த  காவல் துறை யினர் அவரை தேடி வருகின்றனர்.