tamilnadu

img

சூரமேனி குப்பத்தில் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகள்

காஞ்சிபுரம், அக். 28- வாலாஜாபாத் வட்டத் தில் உள்ள சூரமேனி குப்பத்தில் வட்டார வளர்ச்சி  அலுவலகத்தின் உத்தரவு படி போடப்பட்ட ஆழ்துளை  கிணறுகள் சில மூடப்படாமல் உள்ள அவலம் குறித்து கிராம மக்கள் புகார் அளித் துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம்  வாலாஜாபாத் ஒன்றியத் திற்குட்பட்ட  சிங்காடிவாக்கம் கிராமத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது சூர மேனி குப்பம். இக் கிரா மத்தில் கடந்த கோடை காலத்தின் போது கடும் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதை நிவர்த்தி செய்ய வட்டார வளர்ச்சி அலு வலகத்தில் உத்தரவு பெற்ற ஒப்பந்ததாரர் மூலம் 8 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள்  போடப்பட்டு தண்ணீர் எடுக்க முயன்றனர்.  எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.கிரா மப்புற சாலையை ஒட்டிய வாறு மட்டும் சுமார் ஒன்பது  இடங்களுக்கு மேல் ஆழ்  துளை கிணறுகள் தோண் டப்பட்டு சரிவர மூடப்படாமல்  அரைகுறையாக விட்டுச் சென்றனர். திருச்சி நடுக்காட்டு பட்டி யில் ஆழ்துளை கிணற்றில் சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ள சூழ்நிலைக்கு பிறகு சில இடங்களில் மண்ணை போட் டும், கல்லை போட்டும்  தற்கா லிகமாக மூடிவைத்துள்ளனர்.  மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகள் பற்றி  வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் பணி புரியும் ஊராட்சி  செயல் அலுவலரிடம் கிராம மக்கள் கூறியுள்ளனர். அதற்கு அவர், இது எனது வேலை இல்லை, என்னால் செய்ய முடியாது, அதற்கு பல வழிமுறைகள் உள்ளது. அதை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அக்கறை யின்றி பேசியதாக கிராம மக்  கள் வேதனை தெரிவித்தனர்.  கிராமத்தில் சரிவர மூடப்  படாமலும், சற்றும் மூடப் படாமல் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு களை  கண்டறிந்து  அவற்றை  சரியான முறையில், பாது காப்பாக மூடிவிட வேண்டு மென வட்டார வளர்ச்சி அலு வலருக்கு கிராம மக்கள்  வேண்டுகோள் விடுத்துள்ள னர்.