காஞ்சிபுரம், அக்.23- காஞ்சிபுரம் மாவட்டம் தென்னேரி கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கழிப்பறை வசதிகள் இல்லா மல் மாணவிகள், ஆசிரி யர்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையை அறிந்த குரோவிங் ஆப்பர்சூனிட்டி என்ற தனியார் நிதி நிறுவனம் பள்ளிக்கு கழிப்பறை கட்ட முன்வந்தது. பின்னர் பள்ளிக் கல்வித்துறையில் ஒப்புதல் பெற்று பள்ளி வளா கத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 5 கழிப்பறை களை கட்டித்தந்துள்ளனர். பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மோகன சுந்தரம் வசம் செவ்வாயன்று (அக்.22) ஒப்படைக்க ப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பள்ளிக் கல்வி ஆய்வாளர் சிவக்குமார், குரோவிங் நிதிநிறுவன மேலாளர்கள் கிறிஸ்துமஸ், சாமுவேல் ஜெய்சங்கர், அன்பின் பென்சாம், பிரபாக ரன், வாலாஜாபாத் பகுதி மேலாளர் கிளவர் கிங், செங்கல்பட்டு கிளை மேலா ளர் செபாஸ்டின், சி.எஸ்.ஆர் மேலாளர் ராஜசேகர் ஆகி யோர் பங்கேற்றனர்.