மதுராந்தகம், ஏப்.13-பாட்டாளி மக்கள் கட்சியில் தேர்தலில் போட்டியிட ஆள் கிடைக்காததால் அதிமுகவுடன் மருத்துவர் ராமதாஸ் கூட்டணி வைத்திருப்பதாக மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பழ.கருப்பையா பேசினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வத்தை ஆதரித்து மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா பேசியதாவது:- கடந்த 2 ஆண்டு காலமாக எடப்பாடி என்ன சிறப்பான ஆட்சியைச் செய்தார் தன் ஆட்சிக் காலத்திற்கும் ஆட்சிக் காலத்திற்கு பிறகும் மக்கள் நலனுக்காக ஆட்சியை நடத்துகிறார்களோ அவர்களை நல்லாட்சி நடத்தும் திறன் படைத்தவர் அவ்வாறு எடப்பாடி நடந்து கொள்ளவில்லை. சேலத்திற்கு சென்னையிலிருந்து மூன்று வழித் தடங்கள் உள்ளன அதுபோதாது என தன் சொந்த ஊரானசேலத்திற்கு எட்டு வழிச் சாலையைபத்தாயிரம் கோடி ரூபாயில் கொண்டுவர நினைத்தார் அது வெறும் 53 கிலோ மீட்டர் தூரத்தைக் குறைக்க இவ்வளவு பணத்தை வீணடிக்க வேண்டுமா? அதற்காக விவசாய விளை நிலங்கள்மலைகள் இயற்கை வளங்களை அழித்து இந்த எட்டு வழிச் சாலை கொண்டு வர வேண்டுமா? இது தேவை தானா?தமிழகத்தில் ஆட்சி செய்கின்ற எடப்பாடி கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 ஆயிரம் கோடி ரூபாய்ஊழல் செய்துள்ளார். என ஆளுநரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாமக சார்பில் புகார் தெரிவித்தார்கள். இனி எந்த காலத்திலும் திராவிடகட்சிகளோடு கூட்டணி இல்லை எனத் தெரிவித்தார்கள் தற்போது பாமகவில் தேர்தலில் நிற்க ஆள் இல்லாததால் திராவிட கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ளார். இவர்கள் இப்போது கூட்டணி அமைத்துள்ள கட்சி ஓட்டை விழுந்து மூழ்கும் கப்பல் அந்த கப்பலோடு இவர்களும் சேர்ந்து மூழ்குவார்கள் இவ்வாறு பேசினார்.மதுராந்தகம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் மலர்விழிகுமார் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக மாவட்டச்செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் கே.வாசுதேவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னதாக வாக்கு சேகரித்துப் பேசினர்.