tamilnadu

img

தவறான பந்தயத்தில் வெற்றிபெற போராடுகிறது...

புதுதில்லி;
கொரோனா விஷயத்தைப் பொறுத்தவரை, தவறான பந்தயத்தில் வெற்றிபெறுவதற்கு மோடி அரசு போராடிக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக் கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி 3 லட்சத்து 8 ஆயிரத்து 933 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 8 ஆயிரத்து 884 பேர் உயிரிழந்துள்ளனர்.வேர்ல்டோ மீட்டர், ஜான் ஹோப்கின்ஸ்பல்கலைக்கழம் ஆகியவற்றின் கணக் கின்படி, உலகளவில் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 5-ஆவது இடத்திலிருந்த இந்தியா, பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.இதனைக் குறிப்பிட்டே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், “தவறான பந்தையத்தில் வெற்றி பெறுவதற்கான பாதையில் இந்தியா பயணித்து வருகிறது. இது ஆணவம் மற்றும் திறமையின்மை என்ற கலவையின் விளைவால் ஏற்பட்ட ஒரு பயங்கரமான சோக நிகழ்வு”என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 4-வது இடத்துக்கு இந்தியா நகர்ந்துள்ளதை சுட்டிக் காட்டும் வரைபடத்தையும் ராகுல், அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.