எஸ்ஆர் எம் பல்கலைக்கழக மாணவி 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. அங்கு திருவள்ளூர் மாவட்டம் பென்னேரியை சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி 3ம் ஆண்டு பயோமெடிக்கல் படித்து வந்துள்ளார். கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி, திடீரென விடுதிக் கட்டிடத்தின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த மறைமலை நகர் போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.