காஞ்சிபுரம், ஜூன் 27- கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த ஊழியர்களுக்கு அரசு அறிவித்தவாறு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வலி யுறுத்தி வருவாய்த்துறை ஊழி யர்கள் கருப்பு பட்டை அணிந்து பணி புரிந்தனர். துணை ஆட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஜூன் 24, 25, 26 ஆகிய நாட்களில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்ற தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறைகூவல் விடுத்திருந்தது. அதன் படி தமிழகம் முழுவதும் ஊழியர்கள் வெள்ளிக்கிழமையன்றும் (ஜூன் 26) கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர். இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் கியூரி தலைமையிலும், செங்கல் பட்டு மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் சுகுமாறன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.