காஞ்சிபுரம், ஜூலை 23 - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கோவிலுக்கு காஞ்சிபுரம், பூந்தமல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் பிரதான பகுதிகளில் இடங்கள் உள்ளன. இவற்றில் சிலவற்றை தனியார் ஆக்கிரமித்து பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார் அறக்கட்டளை ஆக்கிரமித்திருந்த 32 கிர வுண்ட் பள்ளி கட்டிடம் மற்றும் காலி யிடத்தை காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரேணுகாதேவி முன்னிலையில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், செந்தில்குமார், குமரன் உளளிட்டோர் முன்னிலையில் மீட்கப்பட்டது. இந்த கட்டத்தில் உள்ள பதிமூன்று கதவு கள் பூட்டப்பட்டு இரும்பு கிரில் கேட் இரண்டும் பூட்டப்பட்டு இந்து சமய அற நிலையத்துறை முத்திரையிடப்பட்டு திருக் கோவில் சுவாதீனம் கொண்டுவரப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 40 கோடி என்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.