திருப்பெரும்புதூர்,ஜன.5 சங்கம் வைத்ததற்காக பழி வாங்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கிட வலியுறுத்தி சிஐடியு சார்பில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் பகுதியில் அஸாகி தொழிற்சாலையில் சிஐடியு சங்கம் அமைத்தற்காக 26 தொழி லாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த தொழி லாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும், பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், கொரிய நிறுவனங்க ளில் சம்பள பேச்சுவார்த்தையை தாம தமின்றி நடத்திட வேண்டும் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்க ளின் குடும்பங்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் திருப்பெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பேருந்து நிலையம் அருகில் ஞாயிறன்று (ஜன. 5) சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில் பட்டினிப்போராட்டம் நடைபெற்றது. இதனை துவக்கிவைத்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசினர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் வாழ்த்திப்பேசினார், கோரிக்கை களை விளக்கி சிஐடியு நிர்வாகிகள் கவுரிசங்கர், சசிதரன், மாவட்டக்குழு நிர்வாகிகள் அலெக்ஸாண்டர், தினகரன், செந்தில், `ஹூண்டாய் தொழிற்சங்க நிர்வாகிகள் ரவி, வடிவேலன், பாக்ஸ்கான் நிர்வாகி கள் ரஜினி, டாங்சன் நிர்வாகி பிரபு, யமஹா நிர்வாகி மணிகண்டன், அஸாகி நிர்வாகி ஜோசப், ஹெவொர்த் நிர்வாகி கோவிந்தராஜ், பைசர் நிர்வாகி பாபு உள்ளிட்ட பலர் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்டச் செயலா ளர் இ.முத்துக்குத்தூர் பேசினார். போராட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், தொழிலாளர்கள் சங்கம் வைக்கவும் கூட்டுப்பேர உரிமையை கேட்கவும் உலக தொழிலாளர் ஸ்தாபனம் தனது சட்டத்தில் சரத்து 87, 98ல் வலியுறுத்தியுள்ளது. அந்த சட்டத்தை ஏற்றுக்கொண்ட மத்திய மாநில ஆட்சியாளர்கள் அதை நடை முறைப் படுத்த மறுத்து வருகின்ற னர். சங்கம் வைத்தால் இடமாற்றம், பணியிடை நீக்கம், பணி நீக்கம் தொடர்கின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பன்னாட்டுத் தொழிற்சாலைகளில் சங்கம் வைக்க கடந்த பத்து ஆண்டுகளாக நாம் தொடர்ந்து போராடிவருகின்றோம். தொழிலாளர்களை ஆடு, மாடுகளைப்போல் நடத்துகின்றனர். சங்கம் வைத்து போராடும் தொழி லாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றால் சங்கம் வைக்காமல் இருப்பதற்கும் தடுப்ப தற்கும் நிர்வாகம் 10 கோடி செலவு செய்கின்றனர். மத்திய மாநில அரசு களுக்குப் பன்னாட்டு மூலதனம் வந்தால் மட்டும் போதும். அதை கணக்குக் காட்டி பெருமை பட்டுக்கொள்கிறார்கள். ஆனால் அந்த ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை குறித்து அவர்களுக்கு கவலை கிடையாது என்றார் சவுந்தரராசன்.