செய்யூர், செப். 14- சித்தாமூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரிய ரும் ஜாக்டோ ஜியோவின் மாவட்ட நிதி காப்பாளருமான குமார் அடையாளம் தெரி யாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யுர் வட்டம் சூனாம்பேடு கிராமத்தை சார்ந்தவர் குமார் (50). இவர் மதுராந்தகம் அடுத்துள்ள கய நல்லூர் அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மேலும், ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாவட்ட நிதி காப்பாளராகவும் செயல்பட்டுவந்தார். இவர் வெள்ளியன்று (செப் 14) மாலை மதுராந்த கத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் நடந்த 9 அம்ச கோரிக்கைகளை விளக்கி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பெரிய களக்காடி அருகே சென்ற போது அவ்வழியாக அதிவேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகி னார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.தகவல றிந்து சென்ற சித்தாமூர் காவலர்கள் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மது ராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சித்தாமூர் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும் அதன் உரிமையாளரையும் தேடி வருகின்றனர். சூனாம்போடு காவல்நிலையம் எதிரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த குமார் உடலுக்கு ஜாக்டோ ஜியோ, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.