செங்கல்பட்டு, அக். 26- அரசாணை 318ஐ பயன்படுத்தி குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, காட்டாங்கொளத்தூர் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் ஏராளமான குடும்பங்கள் குடிமனை பட்டா இல்லாததால் மின்சாரம், தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட அரசு உதவி களைப் பெறமுடியாமல் அவதிப்படுகின்ற னர். இந்நிலையில் தமிழக அரசு வெளி யிட்டுள்ள அரசாணை 318ஐ பயன்படுத்தி குடி மனை பட்டா இல்லாதவர்களுக்கு உடனடி யாக பட்டா வழங்க வேண்டும், சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலா ளர்கள், கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, விபத்து நிவாரண உதவி, ஓய்வூதியம், உள்ளிட்ட நலத்திட்டங்களைப் பெற உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும், நூறுநாள் வேலைத் திட்டத்தில் தேவைப்படும் நிதியை ஒதுக்கி ஆண்டுக்கு 200 நாட்களாக வேலை வழங்கி 400 ரூபாய் தினக்கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு வட்டாட்சி யர் அலுவலகம்முன்பு மாவட்டக்குழு உறுப்பி னர் என்.அருணாச்சலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் எம்.சின்ன துரை, மாவட்டச் செயலாளர் பி.சண்முகம், மாவட்டத் தலைவர் டி.கோவிந்தன், விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி. மோகனன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.அழகேசன், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வெ.அரிகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் வட்டாட்சியரி டம் மனுக்கள் அளிக்கப்பட்டன.