tamilnadu

காஞ்சிபுரத்தில் தொற்று 5,000ஐ கடந்தது

காஞ்சிபுரம், ஜூலை 20 - காஞ்சிபுரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த இடத்தில் காஞ்சிபுரம் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 329 பேருக்கு புதியதாக கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 95 ஆக உயர்ந்துள்ளது என்று காஞ்சிபுரம் சுகாதார துறை துணை இயக்குனர் மருத்துவர் பழனி தெரிவித்து உள்ளார். காஞ்சிபுரத்தில், கொரோனா பாதிப்புகளில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 839 பேர் குணமடைந்துள்ளனர்.  69 பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்து 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.