tamilnadu

img

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், நவ.4- வேளாண் விளை பொருட்களை  வரியின்றி இறக்குமதி செய்யும் ஒப்பந்த த்தை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பயிர் காப்பீடு அனைத்து விவசாயிகளுக்கும்  வழங்க வேண்டும், விவசாயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்க வேண்டும் , நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்க வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஜி.மோகனன் தலைமை தாங்கினார்.  மாவட்டச் செய லாளர் கே.நேரு,  பொருளா ளர் ஜி.மாரி,  துணைத் தலை வர் என்.சாரங்கன், பழங்குடி மற்றும் மலைவாழ் சங்க மாவட்டச் செயலாளர் எம். அழகேசன், வட்டத் தலை வர் சம்பத், செயலாளர் இ.சுகுமார், பொருளாளர் ஜி.ஆனந்தவேல், மதுராந்த கம் தலைவர் எம்.ஜெக நாதன், செயலாளர் எஸ்.ராஜா, பொருளாளர் ஜி.தன சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பழங்குடியின சங்கத்தின் மாநிலச் செய லாளர் சரவணன்  ஆர்ப்பாட்ட த்தை முடித்து வைத்துப் பேசினார்.