கடமலைக்குண்டு, ஜுன் 21- இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை சிதைத்து, நாடடின் பாது காப்பை கேள்விக்குள்ளாக்கும் வகை யில் ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து தேனி மாவட்டம் கடமலைக் குண்டு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கட மலை-மயிலை ஒன்றியச் செயலாளர் போஸ், விசிக ஒன்றியச் செயலாளர் வன ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாயிகள் சங்க தேனி மாவட்டச் செய லாளர் கண்ணன், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாண்டி, புயல்மன்னன், ஆறுமுகம் மற்றும் விசிக மாவட்ட அமைப்பாளர் சுருளி, ஒன்றிய துணை செயலாளர் கர்ணன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
பழனி
அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பழனியில் ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி. செல்வராஜ் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அருள்செல்வன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கமலக்கண்ணன், எம்.ராமசாமி ஆகியோர் பேசினர்.