tamilnadu

2 அறிகுறிகள் இருந்தாலே பரிசோதனை செய்யப்படுகிறது சுகாதாரத்துறை அதிகாரி பழனி தகவல்

காஞ்சிபுரம், ஜூன் 29- காஞ்சிபுரம் மாவட்டத்தில் சளி, இருமல்,  தொண்டைவலி, காய்ச்சல், சுவையின்மை, மூச்சுத்திணறல் போன்றவற்றில் இரண்டு அறிகுறிகள் இருந்தால்கூட கொரோனா பரி சோதனை செய்யப்படுவதாக சுகாதாரத்  துறை அதிகாரி பழனி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பரவலாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் உள்ளனர். அறிகுறியுடன் செல்லும் மக்களை,  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பரிசோதிக்காமல் மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்பப்படுகின்றனர். மருத்து வர்களில் சிலர் பணியில் அக்கறையின்றி  கண்காணிப்பாளருடன் சுற்றி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலைமை மருத்துவமனையில் போதிய படுக்கையறைகள் இல்லாததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளையும், கல்லூரி வளாகங்களையும பயன்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும், மாவட்ட அரசு  தலைமை மருத்துவமனைக்கு அறிகுறி யோடு வருகிற அனைவருக்கும் பரிசோதனை  செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகா தாரத்துறை துணை இயக்குனர் வி.கே  பழனி கூறுகையில், கடந்த சில வாரங்களா கவே கொரோனா தொற்று பரவும் தன்மை யில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்ட வர்களில் 80 சதவீதம் பேருக்கு சளி, இருமல், தொண்டைவலி, காய்ச்சல், சுவையின்மை, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. இவற்றில் ஏதே னும் 2 அறிகுறிகள் தென்பட்டால் கூட அவர்  களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய் யப்படுகிறது என்றார்.