tamilnadu

img

மாமல்லபுரத்தில் நாட்டிய விழா துவக்கம் 

 மாமல்லபுரம், டிச.21-  காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் இந்திய நாட்டிய விழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தொடங்கி 30 நாட்கள் நடைபெற்று வரு கிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான நாட்டிய விழாவை வெள்ளியன்று (டிச.20) மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நடராஜன், பெஞ்சமின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று நாட்டிய விழைவை துவக்கிவைத்தனர். முதல்நாளில் மதுரையை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் சென்னையை சேர்ந்த பரத நாட்டியக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை இயக்குநர் அமுதவல்லி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் அஷோக் டோங்ரே, சுற்று லாத்துறை அலுவலர் சக்திவேல் மற்றும் அரசுத்துறை அதிகாரி கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 30 நாட்கள் கடற்கரை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் தினந்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணிவரை பரத நாட்டியம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடை பெற உள்ளது.