tamilnadu

img

2 மாத சம்பளத்தை கேட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், ஜூன் 8 - காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்க ளூர் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி  மருத்துவமனை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ மனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணி புரிகிறார்கள். இங்கு பணிபுரியும் பணியாளர்க ளுக்கு கடந்த இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊர டங்கு பிறப்பிக்கப்பட்ட போதும், மருத்துவ மனைக்கு வருகின்ற நோயாளிகளின் துயர்  துடைக்க செவிலியர்களும், மருத்துவர்க ளும், பணியாளர்களும் அச்சமின்றி பணி யாற்றுகின்றனர். இவ்வாறு பணியாற்றக்கூடிய மருத்துவ மனையின் ஊழியர்களுக்கு வைத்துள்ள சம்பள நிலுவையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று (ஜூன் 8) மருத்துவமனை முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மருத்துவ மனை ஊழியர்கள் சங்கத்தின் பொது செய லாளர் கே.பாஸ்கர் தலைமை  தாங்கினார். சிஐடியு மாநில செயலாளரும், மருத்துவ மனையின் ஊழியர் சங்கத் தலைவருமான இ.முத்துக்குமார், சங்கத்தின் பொருளாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.