கள்ளக்குறிச்சி. ஜூலை 9- பல்வேறு பணிகளுக்காக ஊராட்சி ஒன்றிய அலு வலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் சிலரால் இந்த அலுவல கங்களில் பணிபுரியும் பல்வேறு நிலை அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று பரவும் நிலையில் அந்த அலுவலகங்கள் மூடப்பட்டு வருகின்றன. மீதியுள்ள அலுவலகங்களில் பணிபுரி யும் ஊழியர்களும் மன உளைச்சலோடும், அச்சத்தோடும் பணிபுரியும் சூழல் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், தனிநபர் கழிவறை கட்டும் திட்டம், விவசாயி களுக்கான நிதி உதவி திட்டம், சொட்டுநீர் உள்ளிட்ட பல்வேறு பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படு கின்றன. இவற்றில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பிக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து வருபவர்களில் பலர் தொற்றின் அபாயத்தை உணராமல் உள்ளதாகவே தெரிகிறது. முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் தங்கள் பணி களுக்காக முட்டி மோதும் நிலை நீடிக்கிறது.
இதனால் அலுவலகப் பணியாளர்கள் பலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் ஆட்சியர், துணை வட்டாட்சியர்கள், ஒன்றிய அலு வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதன் காரணமாக கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்களும், திருநாவ லூர் உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. 15 நாட்களுக்கு பொதுமக்கள் அலுவ லகங்களுக்குள் வரவேண்டாம் என்ற அறிவிப்பும் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது கள்ளக்குறிச்சி மார்க்கெட் அருகே செயல்படும் அம்மா உணவகத்தில் பணி புரிப வருக்கு தொற்று ஏற்பட்டதால் உணவகமும் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு அலுவலகங்களில் பணி புரியும் ஊழியர்கள் அச்சத்தோடு பணியாற்றும் சூழல் உள்ளது. எனவே அனைத்து அலுவலகங்களிலும் உடல் வெப்ப பரிசோதனைக் கருவி, கிருமிநாசினி, கையுறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை களை தீவிரப்படுத்துவதோடு அத்தியாவசிய பணி களுக்காக அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடு கள் மற்றும் 50 விழுக்காடு பணியாளர்களை மட்டும் கொண்டு சுழற்சி முறையில் அலுவலக பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழி யர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.