tamilnadu

img

விவசாய தொழிலாளர்கள் சங்க போராட்டம் வெற்றி டாஸ்மாக் கடை மூடல்

உளுந்தூர்பேட்டை. நவ, 21- கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள நல்லாளகுப்பம் கிராமத்தில் பலரின் மரணத்துக்கு காரண மான அரசு மதுபானக்கடை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் நான்கு கட்ட போராட்டத்தின் மூலம் இழுத்து  மூடப்பட்டது. இக்கடை அமைந்துள்ள சுற்றுப்புற கிரா மங்களில் இருந்து பலரும் குடிப்பதற்காக இங்கு வந்து செல்லும்போது இப்பகுதி பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெரிய அளவிற்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். மேலும் ஆண்கள் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து வீட்டில் உள்ள பெண்  களை அடிப்பது, துன்புறுத்துவது என்று தொடர்ந்து நடை பெற்று வந்ததோடு மது வால் பாதிக்கப்பட்டு இதுவரை 8 பேர் உயிரி ழந்துள்ளனர். எனவே இக்கடையை உடனடி யாக மூடி அப்புறப்படுத்த வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே மூன்று முறை போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் கடையை மூடுவதாக ஒப்புக்கொண்டு எழுத்து மூலமான உடன்படிக்கையும் ஏற்பட்ட நிலையில் கடையை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே புதன்கிழமையன்று உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு (நவ.20) குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. மாலை நேரத்திற்கு பிறகும் போராட்டம் தொடர்ந்த நிலையில் அதிகாரிகள் போராட்டக் குழு வினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உட னடியாக கடையை மூடுவது என எழுத்து மூல மான உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்  அடிப்படையில் நவ.21 அன்று நல்லாள குப்பம் டாஸ்மாக் கடை இழுத்து மூடப்பட்டது.  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமையில் அப்பகுதி கிராம பெண்கள் நடத்திய உறுதியான போராட்டம் இதன் மூலம் வெற்றி அடைந்தது.