tamilnadu

img

சிபிஎம் தலைமையில் மக்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூடல்

தஞ்சாவூர், மே 22- தஞ்சாவூர் மாவட்டம், பூத லூர் அருகேபுதுக்குடியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரி வித்து போராட்டம் நடத்தி யதை அடுத்து, திறக்கப்பட விருந்த டாஸ்மாக் கடை திறக்காமலேயே மூடப்பட்டது. புதுக்குடி ஊராட்சியில் பொதுமக்களின் எதிர்ப்பை யும் மீறி கடந்த இரு ஆண்டு களாக டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. ஊரடங்கின் போது டாஸ்மாக் கடை மூட ப்பட்டது. இந்நிலையில் மூட ப்பட்ட டாஸ்மாக் கடையை  வெள்ளிக்கிழமை திறக்க  நிர்வாகம்முடிவு செய்தது.  இதுகுறித்து தகவலறிந்த  புதுக்குடி, வெண்டையம்ப ட்டி கிராம மக்கள்,மாதர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என ஏராளமானோர் டாஸ்மாக் கடை முன் திரண்டு டாஸ்மாக் கடையை திறக்ககூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த அதி காரிகள், தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன், அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்க மாவட்டச்  செயலாளர் எஸ்.தமிழ்ச்செ ல்வி, சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பா ஸ்கர், சிஐடியுமாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.விஜய குமார், புதுக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் அன்பரசி  இளவரசன், வெண்டைய ம்பட்டி ஊராட்சி மன்றத் தலை வர் கனிமொழி சிவ குமார், திமுக ஊராட்சிக் கழகச் செயலாளர் சிவா னந்தம், அறிவழகன் மற்றும்  பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.  அப்போது, “கொரோனா  ஊரடங்கால் பொதுமக்கள்  வேலை வாய்ப்பை இழந் துள்ளனர். இந்த பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறந்தால், வீட்டில் உள்ள  பொருட்களையெல்லாம் பெண்கள் இழக்க வேண்டி வரும்என டாஸ்மாக் கடையை திறக்க கூடாது” என  அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க முறையிட்டனர்.

இதையடுத்து டாஸ்மாக் கடையை திறக்கும் முடிவை கைவிட்டனர், அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து கிராம மக்களும் போராட்ட த்தினை கைவிட்டனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பும் இதேபோல் கடையை திறக்க அதிகாரிகள் நடவ டிக்கை எடுத்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கம் கடும் எதிர்ப்பு காரணமாக கடை  மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.