tamilnadu

img

உளுந்தூர்பேட்டை அருகே 29 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 10 பேர் கைது

உளுந்தூர்பேட்டை, ஜூன் 3-  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே ரகுநாதபுரம் கிராமத்தில் சோப்பு தொழிற்சாலையில் பதுக்கி வைக்கப்  பட்டிருந்த 29 டன் ரேஷன் அரிசி மூட்டை களை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறை யினர் பறிமுதல் செய்து 10 பேரை கைது செய்தனர். ரகுநாதபுரத்தைச் சேர்ந்த குமரகுரு என்ப வருக்கு சொந்தமான சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அதே பகுதியில் உள்ளது.‌ கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்ததால்  மூடப் பட்டிருந்த இந்த தொழிற்சாலையில் இருந்து  கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ரேஷன் அரிசி  மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு கடத்தப் படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு  பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதயடுத்து காவல் துறையினர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு 580 முட்டைகள் கொண்ட 29 டன் ரேஷன்  அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அந்த  மூட்டைகளை பறிமுதல் செய்து,  விழுப்பு ரத்தைச் சேர்ந்த இப்ராகிம் சுகர்ணா (40)  உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். மேலும்  ஒரு லாரி, ஒரு கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்யப்பட்டன.  பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் எடை  குறைவாக வழங்கப்படுவதும், பல அட்டை களுக்கு பொருட்களே வழங்கப்படாமல் இருப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதில் துறையின் முக்கிய அதிகாரி களுக்கும், சில ஊழியர்களுக்கும், ஆளும்  கட்சியின் உள்ளூர் பிரமுகர்கள் உதவியில்லா மல் நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும்,  வழக்கம்போல் கீழ்நிலையில் உள்ளவர்களை யும், இடைத்தரகர்களாக செயல்படுபவர்க ளையும் மட்டும் கணக்கில் காட்டிவிட்டு இதற்கு உறுதுணையாக இருந்த அனைவர்  மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.