tamilnadu

img

சிதம்பரத்தில் களைகட்டிய மகளிர் தின விழா

சிதம்பரம், மார்ச் 10- சிதம்பரம் நகரத்தில் உள்ள கஸ்தூரிபாய் கம் பெனி என்ற பழமை வாய்ந்த துணிக்கடை நிறுவனம் மகளிர் தினத்தையொட்டி பெண்கள் இந்த ஒரு நாளா வது சமையலறையை மறந்து  மகிழ்ச்சியடையும் விதமாக கோலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்ட பாரம்ப ரிய  விளையாட்டுக் கலை களை நினைவு படுத்தும் வகையில் பல்வேறு குதூகல நிகழ்ச்சியை நடத்தியது.  இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு பாட்டுப் போட்டி பேச்சுப்போட்டி என  நடத்தி பரிசுகளை வழங்கி யது. பெண்ணிய பேச்சாளர் கீர்த்தனா கலந்துகொண்டு பெண்கள் எதையும் நம்பக்கூடாது சுயஅறிவுடன் செயல்படவேண்டும் என  பெண்களுக்கு உற்சா கத்தை ஏற்படுத்தும் வகை யில் பேசியது நல்ல வர வேற்பைபெற்றது.  சிதம்பரம் பகுதியில் விவ சாயம், கல்வி, விளை யாட்டு, காவல்துறை, என சிறந்த பணியாற்றி வரும் பெண்கள் 6 பேருக்கு நம்ம  ஊரு நாயகி என்ற பட்டத்தை  வழங்கி சாதனை நாயகி என்ற கிரீடத்தை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.   இந்நிகழ்ச்சியில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பெண் கள் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்ச்சியாக இருந்தது.  இதில் கலந்து கொண்ட பெண்கள் கவலைகளை மறந்து கைதட்டி அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைத்து பெண்களுக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது. இதுகுறித்து கடையின்  உரிமையாளர் முத்துக்கும ரன் கூறுகையில், “இந்த  ஊரில் தொடங்கி பாரம்பரிய மாக செயல்பட்டு வருகிறது இந்த கடை வளர்ந்தது இந்தப் பகுதியில் உள்ள மக்களின் ஒத்துழைப்பால் தான்” என்றார். பெண்கள் இல்லா உலகு  இல்லை மேலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே எந்வொரு செய லும் சிறப்பாக அமையும்  எனவே அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்ப டுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தியுள்ளோம்.  இது வரும் காலங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.