tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் அறிவிப்பு

சிதம்பரம், பிப்.4- காவேரி  படுகை பாதுகாப்பு கூட்டி யக்கம் சார்பில் விவசாய சங்கத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.  விவசாய சங்க மாவட்டச் செயலா ளர் வி.எம் சேகர் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க  மாநிலத் தலைவர் வி. சுப்பிரமணி யம், மாவட்டச் செயலாளர் ஜி. மாத வன்,  காவேரி டெல்டா பாசன பாது காப்பு சங்கத் தலைவர் கே.வி  இளங்கீரன், விடுதலை சிறுத்தை கள் கட்சி விவசாய பாதுகாப்பு அணி யின் மாவட்ட அமைப்பாளர் சக்கர வர்த்தி, மானம் பார்த்தான் பாசன  விவசாய சங்கத் தலைவர் ராமச்சந்தி ரன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆர் ரவிச்சந்தி ரன் மாவட்டப் பொருளாளர்  தர்ஷணா  மூர்த்தி, நிர்வாகிகள்  கற்பனைச் செல்வம், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹைட்ரோகார்பன் திட்டம், சாகர் மாலா திட்டத்தை முற்றிலும் திரும்பப் பெறவேண்டும், பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதியை அறிவிக்க வேண்டும். சட்டமன்றத்தில் சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி காவிரிப்  படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் சார்பில் வரும் பிப்ரவரி  13 கடலூரில் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்துவது என முடிவு செய் யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அமைப்புகளின் சார்பில் அதிகமான  விவசாயிகளை திரட்டு வது என முடிவு செய்யப்பட்டது.