கடலூர், செப்.25- பருவமழை முன்னேற்பாடு பணிகளாக வாய்க்கால்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்த ரூ.2.02 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் விடப் பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதத்தில் துவங்கும். மேலும், பல்வேறு மாவட்டங்களின் வடிகால் மாவட்டமாகவும் கடலூர் விளங்குவதால் இந்த மழைக்காலத்தில் அதிகப்படியான வெள்ள நீர் ஆறு மற்றும் நீர்நிலைகளில் செல்லும். எனவே, இந்த நீர்நிலைகளை தூர் வாரி தண்ணீர் விரைந்து செல்லும் வகையில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வா கம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, 28 கிலோ மீட்டர் நீளத்திற்கு, வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி அதன் கரைகளை பலப்படுத்த ரூ.2.02 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து துவங்கும் வகையில் கடலூரில் உள்ள பொதுப்பணித்துறையின் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் பணி களுக்கான ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு செவ்வாய்க்கிழமை பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி, மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார் கோயில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர், பண்ருட்டி வட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்படு கிறது. இதில், முதல் சிப்பமாக ஓமகுளம் முதல் கான்சாகிப் வாய்க்கால் வரையிலும் தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணியும் மற்றும் உப்பனாறு வடிகால், எம்ஜிஆர் வாய்க்கால், குமாரமங்கலம் வடிகால் ஆகிய வற்றில் உள்ள செடி, கொடிகள், மண்திட்டு கள், தடைகளை அகற்றுதல் பணிகள் ரூ.80 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாவது சிப்பமாக காட்டு மன்னார்கோயில் வட்டத்தில் நெய்வாசல், ராதா கிளை வாய்க்கால், வடிகால், தென்ரெட்டை, குன்னன் கிளை வாய்க்கால், திருச்சின்னபுரம் வாய்க்கால், புதிய மற்றும் பழைய ஈச்சம்பூண்டி, கண்டமங்கலம், மேலக்கடம்பூர், கீழகடம்பூர், செட்டித் தாங்கல், சார்வராஜன்பேட்டை வடிகால் ஆகியவற்றை பலப்படுத்தும் பணி ரூ.75 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது. மூன்றாவது சிப்பமாக, ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் டி.நெடுஞ்சேரி, பாண்டியன் வடி கால்கள், கடலூர் வட்டத்தில் கெடிலம் ஆறு, கொண்டாங்கி ஏரி, சின்ன வாய்க்கால், வண்டிப்பாளையம் வாய்க்கால், புலிகுத்தி ஓடை கிளை வாய்க்கால், பெண்ணையாறு, தோட்டப்பட்டு ஏரி வரத்து மற்றும் வடிகால், பண்ருட்டி வட்டத்தில் வெள்ளப்பாக்கம் பிர தான வாய்க்கால், சிறுகிராமம் ஏரி, வீரபெரு மாள் நல்லூர் ஏரி, கண்டரக்கோட்டை ஏரி, புலவனூர் ஏரி, எல்.என்.புரம் ஏரி, பூங்குணம் ஏரி, சேமக்கோட்டை ஏரி, நத்தம் ஏரி, குறிஞ்சிப்பாடி வட்டத்தில் மருவாய் மன்னேரி, டி.பாளையம் பெரிய ஏரி, விருப்பாச்சி கணக்கன் ஏரி ஆகியவற்றின் வாய்க்கால்கள் ஆறுகளில் உள்ள தடுப்புகள், மண்திட்டுகள், செடி, கொடிகளை அகற்றும் பணி ரூ.47 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் மழைக்காலமான அக்டோ பர் மாதத்தில் துவங்கும் என்று பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தகவல் தெரி வித்துள்ளன.