tamilnadu

அரசு செட்டாப் பாக்ஸ் வழங்க கோரிக்கை

சிதம்பரம்,அக்.6- மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா தமிழக முதல்வருக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார். அதில்  சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்க ளிடம் தனியார் செட்டாப் பாக்ஸை வாங்க வேண்டும் என்றும்.ஒவ்வொரு பாக்ஸ்க்கும் சர்வீஸ் கட்டண மாக ரூ.1000 செலுத்த வேண்டும் நிர்பந்தம் செய்து வருகிறார்கள். தற்போது தனியாருக்கு சொந்தமான செட்டாப் பாக்ஸ்ஸை அதிக கட்ட ணத்திற்கு பொதுமக்களிடம் தினித்து வருவது மிகவும் கண்டிக்கதக்கது. அரசு கேபிளை பயன்படுத்தும் பொதுமக்கள் அனை வருக்கும் அரசு செட்டாப் பாக்ஸ் மிகவும் குறைந்த சர்விஸ் கட்டணத்தில் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.