tamilnadu

உபரிநீரை சேமிக்க புதிய திட்டங்கள் தேவை குறைக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூர், செப். 28- கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்பு மற்றும் ஆலோச னைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் கோ.மாதவன் கூறுகை யில், ‘குடிமராமத்து பணிகளை விரை வுப்படுத்தி மழைக் காலத்திற்குள் முடிக்க வேண்டும். வீராணம் ஏரியி லிருந்து வெய்யனுர், பூதங்குடி வாய்க்கால் உள்பட பல்வேறு வாய்க்கால்களில் தண்ணீர் செல்ல வில்லை. நலிவடைந்த சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்’ என்றார். பாசிமுத்தான் ஓடை பாசன விவசாயிகள் சங்கம் பெ.ரவீந்திரன் கூறுகையில் ‘காவிரி டெல்டா பாசன உரிமையை கடலூர் மாவட்டம் இழந்து வருகிறது. அரசு 5 மண்டலங்களுக்கு ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு நிதி வரவில்லை. பாசிமுத்தான் ஓடையில் தண்ணீர் உடைப்பு ஏற்படும் பகுதிகளை பார்வையிட்டு சரி செய்ய வேண்டும். 3 ஆயிரம் அடி நீர் கடத்தும் வகையில் பாசிமுத்தான் ஓடையில் பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு பெற்றும் 1500 கன அடிக்கு மட்டுமே பாலம் அமைப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்றார். காவிரி நீர் வெள்ளாற்றில் காவாலங்குடி வரையில் வந்து  கடலுக்குச் செல்கிறது. இதனை,  சுமார் 1 கிமீ தூரம் வரையில் கால்வாய் வெட்டி கூடழையாத்தூ ரில் திருப்பி விட்டால் ஏராளமான கிராமங்கள் பயனடையும். நெடுஞ்சேரி, காவனூர் ஏரிகளை மராமத்து செய்ய வேண்டும்,  பெலாந்துறை அணைக்கட்டிற்கு  தண்ணீர் வந்து 20 ஆண்டுகளாகிறது. எனவே, வீராணம் ஏரியிலிருந்து மோட்டார் மூலமாக இறைத்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு பணம் கிடைக்கும் வகையில் மத்திய அரசின் கம்பெனி சட்டத்தை திருத்த வேண்டும். தட்கல் திட்டத்தில் பணம் கட்டியும் மின் இணைப்பு கிடைக்காமல் உள்ளது. வயலூர் ஏரியை தூர்வாரி என்எல்சி உபரி நீரை அதில் தேக்கி மேற்கு நோக்கி திருப்ப வேண்டும். மக்காச்சோளம் பயிரிடம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், அரசுக்கு உரிய வருவாய் கிடைக்கும் வகையிலும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கைக ளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பதிலளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன், வேளாண்மை இணை இயக்குநர் ஜி.ஆர்.முருகன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மாரியப்பன், துணை இயக்குநர் சு.பூவராகன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள், கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் சொ.இளஞ்செல்வி, முன்னோடி வங்கி மேலாளர் பி.ஜோதிமணி ஆகி யோர் இதில் கலந்து கொண்டனர்.