tamilnadu

img

வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சிதம்பரம், ஜூலை 26- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்  கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி  நிரம்பியதால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக  உள்ளது வீராணம் ஏரி. இதன்  முழு கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் காவிரி டெல்டா பகுதி களான காட்டுமன்னார்கோவில், சிதம்ப ரம், புவனகிரி வட்டப் பகுதியில் உள்ள  சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய  நிலம் பாசனம் பெறுகிறது. இதனால்  இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள்,  விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வா வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. சென்னையின் குடிநீர் தேவையை போக்கவும் இந்த ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்படுகிறது. தற்போது படிப்படியாக ஏரியின்  நீர்மட்டம் உயர்ந்து  ஏரி அதன்  முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.

 இதனால்  இப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏரி நிரம்பியதால் இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, பாசனத்திற்கு தேவையான தண்ணீரும் கிடைக்கும். சென்னைக்கும் தங்கு தடையின்றி தொடர்ந்து தண்ணீர் அனுப்ப இயலும்.   இந்நிலையில்  விவசாயிகள் சிலர்  குமராட்சி பகுதியில்  குறுவை சாகு படி செய்துள்ளனர். தற்போது தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காயும்  நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே  ஏரியி லிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுப் பணித்துறையினர் சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் மாதம் இறுதியில் திறப்பதாக கூறியுள்ளனர். குறுவை சாகுபடியில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.