tamilnadu

img

தலித் பெண் படுகொலை: காவல் நிலையம் முற்றுகை

சிதம்பரம், ஜூலை 7- கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டம் ஸ்ரீராமன் கிராமத்தைச் சார்ந்த தலித் பெண் தனலட்சுமி பாலியல் வன்புணர்வு செய்து அடித்துப் படுகொலை செய்த அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடு தலை சிறுத்தைகள் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில்  திருமுட்டம்  காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தற்கொலையாக பதிவு செய்திருந்த இந்த  வழக்கை, போராட்டத்தைத் தொடர்ந்து  கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதில் சி.பி.எம். மாவட்டக் குழு உறுப்பி னர் பிரகாஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மாநிலச் செயலாளர் வாஞ்சிநாதன், வட்டக்குழு உறுப்பினர்கள் வெற்றிவீரன், விஜயகுமார், பொன்னம்பலம், கே.பி.குமார்.  விசிக நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர் செல்லப்பன், மண்டலச் செயலாளர் திருமாறன்,  காட்டுமன்னார்குடி தொகுதி செயலாளர் வெற்றி வேந்தன், மாணவரணி செயலாளர் நீதிவள வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.