சீர்காழி, மார்ச் 23- கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் அருகே கடவாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மாரி முத்து மகன் கணபதி (28) என்பவர் கடந்த சில தினங்க ளாக திருநெல்வேலி மாவட்ட கிராமப் பகுதியில் நெல் அறு வடை இயந்திர டிரைவராக இருந்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இதன்பின் இவர் கொள்ளிடம் அருகே அளக் குடி கிராமத்தில் உள்ள கண பதியின் மைத்துனர் பாஸ்கர் வீட்டுக்கு வந்தார். அப்போது இவருக்கு சளியுடன் கூடிய இருமல் இருந்ததை அக்கம் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர்கள் பார்த்து கொரோனா தாக்குதலாக இருக்குமோ என்று அச்சமடைந்து, ஊராட்சி தலைவருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து ஊராட்சி தலைவர் ரமேஷ் உடனடியாக தகவல் கொ டுத்ததின் பேரில் 108 ஆம்புலன்ஸ் வீடு தேடி அளக்குடி வந்தது. கிராம மக்கள் திரண்டு கணபதியை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணபதிக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் கொ ரோனா அறிகுறி இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்ததையடுத்து கணபதி சொந்த ஊரான கட வாச்சேரியில் உள்ள அவர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் பபிதா, சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராமன், சுகாதார ஆய்வாளர் கருணாகரன், சுந்தரம் சதீஷ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் அளக் குடி கிராமத்துக்குச் சென்று தீவிர கண்காணிப்பு, விழிப்பு ணர்வு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே தென்கொ ரியாவில் வேலை பார்த்து வந்த சாரங்கன் என்பவரின் மகன் ஷியாம்குமார் (44) என்பவர் தனது சொந்த ஊரான அளக்குடி கிரா மத்திற்கு வந்த செய்திய றிந்த கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் பபிதா தலைமையிலான மருத்து வக் குழுவினர் அளக்குடி க்குச் சென்று அவருக்கு கொரோனா தாக்குதல் இல்லையென்றாலும் தனி மையாக இருக்க அறிவுறுத்தி னர். தொடர்ந்து வெளிநாடு களிலிருந்து வருபவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.