கடலூர்,மே 21-மார்க்சிஸ்ட் கட்சியின் நெய் வேலி நகர் குழு உறுப்பினர் எஸ்.கார்த்திகேயன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் கார்த்திகேயன் நெய் வேலி கூட்டுறவு நாணயச் சங்கத் தின் இயக்குநராகவும், சிஐடியுமாவட்டக் குழு உறுப்பினராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.மாணவர் சங்க தலைவர், வாலிபர் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர், மாநில துணைத் தலைவர், நெய்வேலி சிஐடியு சங்க துணைத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் துடிப்புடன் பணியாற்றியவர்.மார்க்சிஸ்ட் கட்சியின் நெய் வேலி நகரக்கு உறுப்பினர் தோழர் எஸ்.கார்த்திகேயன் (47) மே 20 அன்று அகால மரணமடைந்தார். அவரது குடும்பத்திற்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும், தொழிற் சங்கத்திற்கும் கார்த்திகேயன் மரணம் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.கார்த்திகேயனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நெய்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாற்றுத் திறனாளிகள் சங்க அகில இந்திய துணைத் தலைவர் பா.ஜான்சிராணி, மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜி.மாதவன், மூசா.கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.திரு அரசு, எம்.மருதவாணன், வி.சுப்புராயன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், வி.உதயகுமார், அசோகன், ரமேஷ்பாபு, சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன், மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஆர்.பாலமுருகன், நெய்வேலி சிஐடியு சங்கத் தலைவர் ஏ.வேல்முருகன், பொதுச் செயலாளர் டி.ஜெயராமன், அலுவலகச் செயலாளர் ஜி.குப்புசாமி, பொருளாளர் சீனிவாசன், முன்னாள் தலைவர்கள் ஐ.சங்கிலி பாண்டியன், வி.முத்துவேல் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல், நெய்வேலியிலுள்ள பல்வேறு தொழிற் சங்கத் தலைவர்களும், தொழிலாளர்களும், மார்க்சிஸ்ட் கட்சி, தொழிற் சங்கத் தோழர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இவரது குடும்பம் மார்க்சிஸ்ட் கட்சி குடும்பமாகவும். தந்தை சங்கரன் மார்க்சிஸ்ட் கட்சியிலும் சிஐடியு தொழிற்சங்கத்திலும் பணியாற்றி வருகிறார். கார்த்திகேயன் மனைவி பவானி, ஒரு மகன் கவின் பாரதி, மகள் பிரநிதிநேத்ரா உள்ளனர்.