tamilnadu

img

தோழர் எம்.ஆறுமுகம் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல்செய்தியில் கூறியிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தர்மபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான தோழர் எம்.ஆறுமுகம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.தோழர் எம்.ஆறுமுகம் கல்லூரியில் படிக்கும் போதுமாணவர் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் குத்தகை விவசாயிகளுக்காகவும், கந்து வட்டிக் கொடுமையைஎதிர்த்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர், மலைவாழ் மக்கள் போராட்டங்களுக்கு துணை நின்றவர். மாவட்டம் முழுவதும் கிராமப்புற அடித்தட்டு மக்களின்பிரச்சனைகளை தீர்க்க, நேரடியாக களத்திற்குச் சென்று அவர்களது பிரச்சனைக்கு தீர்வுகண்டவர்.ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும், மாவட்டக்கவுன்சிலராகவும், மாவட்டபால்வள கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராகவும், பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணியாற்றியவர்.தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்து பல்வேறு போராட்டங்களுக்கு தலைமையேற்றவர். குறிப்பாக எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்குஎதிராகவும், விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய் அமைப்பதை எதிர்த்தும், உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்தும்போராடியவர். இதனால் பல்வேறு பொய் வழக்குகளை தீரமுடன் சந்தித்தவர்.இடையறாத போராட்டங்களை நடத்தியதன் மூலம் பென்னாகரம் பகுதி மக்களின் நேசத்திற்குரிய தலைவராக விளங்கியவர். அவருடைய மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், விவசாயிகள் இயக்கத்திற்கும் மாபெரும் இழப்பாகும்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சித்தோழர்களுக்கும், கட்சியின்மாநில செயற்குழுவின்சார்பில்ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.