tamilnadu

சாராய வியாபாரிகள்  5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூர், மே 9- சாராய வியாபாரிகள் 5 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா  பரவலைக் கட்டுப்படுத் அறிவிக்  கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தையொட்டி கட லூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்  சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. இதனை யடுத்து காவல் துறையினர் சாராயம் காய்ச்சுப வர்கள் மற்றும் கடத்தி விற்பனை செய்பவர் களை கைது செய்து வருகின்றனர். அதன்படி, தொண்டங்குறிச்சியைச் சேர்ந்த ராஜாராமன் மகன் சந்தோஷ்குமார் (29), பால முருகன் (31), ஐவதுகுடியைச் சேர்ந்த அன்பழ கன் (26) ஆகியோரை வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா கைது செய்தார். பனையந்தூரைச் சேர்ந்த பெ.ரவி (52) என்ப வரை  விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் பிருந்தாவும், மணலூரைச் சேர்ந்த சின்னகுட்டி (எ) ராஜேந்திரன் (28) என்ப வரை சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு  ஆய்வாளர் தீபாவும் கைது செய்தனர். இவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ்  சிறையில் அடைக்க ஆட்சியர் வெ.அன்புச்செல்  வன் உத்தரவிட்டார். இதனையத்து 5 பேரும்  கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.