tamilnadu

img

ஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.3 ஆக பதிவானது.

ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுகக்ம் ரிக்டர் அளவில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்நிலையில் மியாசகி பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மியாசகி நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியது இதனால் மக்கள் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். உள்ளூர் நேரப்படி, காலை 8.48 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாக வில்லை. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. 

உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 20 சதவீத நிலநடுக்கங்கள் ஜப்பானில் நிகழ்கின்றன.