ஜப்பான் நாட்டில் பள்ளி குழந்தைகள் மீது கத்தியை கொண்டு நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் பலியாகினர் மற்றும் 19 பேர் படுகாயமடைந்தனர்.
ஜப்பான் நாட்டின் கவாஸ்கி நகரில் இன்று காலை பள்ளி பேருந்திற்காக காத்து கொண்டிருந்த குழந்தைகள் மீது 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் கத்தியை கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஹனாகோ என்ற 12 வயது சிறுமியும் மற்றும் சதோசி ஒயாமா என்ற 39 வயதுடைய அக்குழுவில் இருந்த குழந்தை ஒன்றின் தந்தையும் பலியாகினர். பின்பு இந்த தாக்குதலை நடத்திய நபர் தன் கழுத்தை தானே கத்தியால் குத்திக் கொண்டுள்ளார். பின்பு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. இச்சம்பவத்தை ஜப்பான் பிரதமர் சின்சோ அபே மிகப்பெரிய அச்சுறுத்தல் என கூறியுள்ளார்.