சின்னாளபட்டி
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அ.குரும்பபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 70 மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள்,ஆதரவற்ற முதியோர்,வறுமை நிலையிலுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோருக்கு அரிசி மற்றும் பத்து வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு அவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியர் பொற்செல்வியின் வழிகாட்டுதலின்படி பள்ளியில் பணியாற்றும் உதவி ஆசிரியர்களான ஜோஸ்பின் சீலி, தங்கா கண்மணி, ஜாக்குலின் லீமா,சித்ரா, பிரியதர்ஷினி ஆகியோர் தங்கள் சொந்த பணத்தில் முதல் கட்டமாக 30 பேருக்கு கொரோனா நிவாரண தொகுப்பை வழங்கினார்.