tamilnadu

img

ஹகிபிஸ் புயல் : ஜப்பானில் இறந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

ஜப்பானில் தாக்கிய ஹகிபிஸ் புயலுக்கு இதுவரை 42  பேருக்கு மேல் பலியானதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான பாதிப்பை ஹகிபிஸ் புயல் ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 180 கி.மீ வேகத்தில் வீசிய இந்த புயல் டோக்கியோவின் தென்மேற்குப் பகுதிகளில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றாட வாழ்க்கைக்கு மக்கள் போராடி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கோர புயலினால் இதுவரை 42 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாகவும், 186 பேருக்கு மேல் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜப்பானின் சில இடங்களில் தொட்ர்ந்து மழை பெய்யும் என்று அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.