சென்னை,டிச.12- 50ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வெற்றிகர மாக செலுத்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட்டை செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாகவும். இதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள் உள்ளிட்டோரின் முயற்சியும், உழைப்பும் பாராட்டுக்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள், பொறி யாளர்கள் உள்ளிட்டோர் பற்பல சாதனைகள் படைத்து தாய்திருநாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்திட தமது சார்பாகவும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், மனதார வாழ்த்துவதாகவும் முதல மைச்சர் கூறியுள்ளார்.