ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தடை செய்யப்பட்ட 4G இணைய இணைப்பு ஞாயிறன்று இரவு இரண்டு மாவட்டங்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஓராண்டு முடிவடைந்து இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 16 அன்றுஇரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் 4 ஜி வழங்கப்பட்டுள்ளது.
ஜம்முவின் கதந்தர்பால், காஷ்மீரின் உதம்பூரின் ஆகிய இரண்டு மாவட்டங்களில் 4ஜி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 2 மாவட்டங்களில் பரிசோதனை அடிப்படையில், கைப்பேசிகளை 4ஜி இணைப்பு கொடுப்பது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அதில், பரிசோதனை அடிப்படையில் இந்த ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருக்கும் மொத்தம் 20 மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் இணைப்பு கொடுப்பது குறித்து கமிட்டி ஆய்வு செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் முதன்மை செயலாளர் ஷலீன் கப்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கதந்தர்பால், உதம்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் 2ஜி இன்டர்நெட் சேவையே தொடரும். இந்த உத்தரவு ஞாயிற்றுக் கிழமை இரவு 9 மணி முதல் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை அமலில் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளது.
கட்டண சந்தாதாரர்களுக்கு மட்டும் இந்த அதிவேக இணைய இணைப்பு வழங்கப்படும். மற்றவர்களுக்கு பரிசோதனை ஆய்வுகள் மற்றும் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அந்தஸ்து வாபஸ் பெறுவதற்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரில் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 25 ஆம் தேதி கைபேசிகளுக்கு 2ஜி இணைப்பு மட்டும் வழங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக மனோஜ் சின்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு முன்பு முர்மு ஆளுநராக இருந்தார்.