ஜெய்ப்பூர்:
சமூகத்தில், பிறப்பிலேயே உயர்ந்தவர்களாக பிராமணர்கள் விளங்குகிறார்கள் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.“தங்கள் பிறப்பால் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் பிராமணர்கள் இருக்கிறார்கள். எப்போதும் மற்ற சமூகங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார்கள். சமுதாயத்தில் கல்வியையும் மதிப்புகளையும் பரப்புவதில் எப்போதும் அவர்கள் பங்காற்றுகிறார்கள். இன்றும் கூட ஒருகிராமத்தில் அல்லது குடிசைப் பகுதியில் ஒரு பிராமணக் குடும்பம் இருக்கும் என்றால், அவர்கள் தங்கள் அர்ப்பணிப்பாலும் சேவையாலும் உயர்ந்தவர்களாக இருப் பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நடைபெற்ற ‘அகில பிராமண மகாசபா’ நிகழ்ச்சியில்தான், ஓம் பிர்லா இவ்வாறு பேசியுள்ளார். தற்போது அவரின் இந்த பேச் சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. அரசியலமைப்பு சட்ட பதவியைவகிக்கும் சபாநாயகர் ஓம் பிர்லா, ஒரு சாதிச் சங்கத் தலைவர் போல,குறிப்பிட்ட ஒரு சாதியை உயர்த்திப்பேசுவதை ஏற்க முடியாது என்று குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் கண்டித்துள்ளனர். சபாநாயகர் ஒம் பிர்லா தனது பேச்சிற்காக, பொதுவெளியில் மன் ப்பு கேட்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில மக்கள் சிவில் உரிமை கழக தலைவர் கவிதா ஸ்ரீவத்சவா வலியுறுத்தியுள்ளார்.“பிர்லா பேச்சு மிகத் தவறானது, கண்டனத்துக்குரியது; சாதிய துவேஷத்தை பரப்பியுள்ளார் ஓம் பிர்லா.இது அரசியல் சாசனச் சட்டம் 14-ஆவது பிரிவின் படி தண்டனைக்குரியது. இதுதொடர்பாக அவர் மீது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் மனு கொடுக்க இருக்கிறோம்” என்றும் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.