ஈரான் ஜனாதிபதி ரவுகானி வருத்தம்
டெஹ்ரான், ஜன.11- உக்ரைன் நாட்டு விமானத்தை தவறு தலாக சுட்டுவீழ்த்தி, மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம் என்று ஈரான் ஜனாதிபதி ரவுகானி வருத்தம் தெரி வித்துள்ளார். ஈரான் ராணுவ தளபதி ஜெனரல் காஸிம் சுலைமானியை அமெரிக்கா குண்டுவீசி படுகொலை செய்தது. இதற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவு கணை தாக்குதல் நடத்தியது. இதற்கு சில மணி நேரங்கள் கழித்து, டெஹ்ரா னில் இருந்து கீவ் நகருக்கு புறப்பட்ட உக்ரைன் நாட்டு விமானம் கீழே விழுந்து நொறுங்கி, தீப்பிடித்ததில் 167 பயணி கள், 9 பணியாளர்கள் உயிரிழந்தனர். விமானத்தின் கறுப்புப் பெட்டியை போயிங் நிறுவனத்திடம் அளிக்க முடி யாது என்று ஈரான் கூறியது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டு விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் தனிநபர் செய்த தவறே இதற்கு காரணம் என்றும் ஈரான் விளக் கம் அளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கூறுகையில், உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த் தியதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். 176 அப்பாவி மக்கள் இறந்த இந்த பேரழி வான தவறுக்கு ஈரான் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது. மன்னிக்க முடியாத இந்த தவறு குறித்து சட்டரீதியிலான விசாரணை நடந்து வரு கிறது என்று தெரிவித்துள்ளார்.