tamilnadu

img

அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை இல்லை - ஈரான் திட்ட வட்டம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை என்று ஈரான் ஜனாதிபதி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றபிறகு ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க வெளியேறியது. இதையடுத்து . அணுஆயுத சோதனை தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் வலுத்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஆனால்  ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வரும் வேளையில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. 
இதுகுறித்து ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி இன்று கூறியதாவது, “அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் இல்லை. நாங்கள் இதற்கு முன்னரே கூறி இருக்கிறோம். இப்போதும் அதனையே கூறுகிறோம்.  அமெரிக்காவுடன் நிச்சயம் பேச்சுவார்த்தை இல்லை. எதிர்காலத்திலும் இதுதான் முடிவு. அவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
ஒருவேளை அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கினால் 2015-ம் ஆண்டு அணுஆயுத ஒப்பந்தத்தின்படி அதிலுள்ள பிற நாடுகளுடன் இணைந்து பல தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கலாம்” என்று  அவர் தெரிவித்துள்ளார்.