புதுதில்லி, மே 12-ஆட்சி முடியும் அந்திமத் தருவா யிலும் கூட இந்திய நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களைச் சூறையாடி அவற்றை முற்றாக அழித்தொழித்து விடும் கார்ப்பரேட் முதலாளித்துவ வெறியாட்டத்தை மிகத்தீவிரமாக அமலாக்கிட முனைந்துள்ளது மோடி அரசு.மத்திய நிதித்துறை அமைச்சகம், நான்கு மாதங்களுக்குள் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையை எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரை வாக முடித்து ஒட்டுமொத்தமாக பொதுச் சொத்துக்களையெல்லாம் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்கு மாற்றிவிட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான வேலைகளை துரித கதியில் முடுக்கிவிடுவது என முடிவு செய்துள்ளது. நான்கு மாதங்களுக்குள் முடிக்க முடியாது எனக் கருதப்படும் சிலபெரிய பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகள் விற்பனையை சற்று கூடுதல் காலம் எடுத்துக் கொண்டு ஆறு மாதத்திற்குள் முடித்திட வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக ஏர் இந்தியாபோன்ற பெரிய நிறுவனங்களின் பங்குகளை விற்க இப்படி அதிகபட்சமாக ஆறு மாத காலம் தீர்மானிக்கப் பட்டுள்ளது.இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய நிதிஅமைச்சக மூத்த அதிகாரி ஒருவர்,பெரும்பாலான மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்ற கொள்கை ஏற்கெனவேஅமலில் உள்ளது; நான்கு மாத காலத்திற்குள் ஒட்டுமொத்த விற்பனை நடவடிக்கையையும் முடித்துவிட வேண்டும் என்று தற்போது வழிகாட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். நடப்பு நிதிஆண்டில் மட்டும் ரூ. 90 ஆயிரம் கோடி அளவிற்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப்பது என்று இலக்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக பல ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையை உடனடியாக முடித்திடவேண்டுமென்று முடிவு செய்திருக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் எவைஎவை என்று நிதி ஆயோக் ஒருபட்டியலை தயாரித்து நிதி அமைச்சகத்திடம் அளித்திருக்கிறது. கொள்ளை லாபம் ஈட்டுகிற மற்றும் தற்சமயம் நஷ்டத்தில் ஓடுகிற வெவ் வேறு நிறுவனங்கள் என மொத்தம் 35 பொதுத்துறை நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவிக்கிறார்.இவற்றில் பல நிறுவனங்களில் ஊழியர்களின் உறுதிமிக்க போரா ட்டத்தின் காரணமாக பங்கு விற் பனை நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் நிதி அமைச்சகம் இருந்தது.
இந்நிலையில் தொழிலாளர்கள் போராடினால் அவர்களை கடுமையாக ஒடுக்கி பங்கு விற்பனையை எப்படியேனும் நடத்துவது என்ற முடிவோடு நிதி அமைச்சகம் இறங்கியிருக்கிறது.
ஏற்கெனவே விற்பனைக்காக தீர்மானிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் என ஏர் இந்தியா, ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏடிஎஸ்எல், பிஇஎம்எல், ஸ்கூட்டர்ஸ் இந்தியா, பாரத் பம்ப்ஸ் கம்ப்ரஸ்ஸஸ் மற்றும் சேலம், துர்க்காபூர், பத்ராவதி ஆகிய பொதுத்துறை இரும்பு எஃகுஆலைகள் ஆகியவை மீண்டும் நிதிஆயோக்கின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களது பங்குகளை மூன்று அல்லது நான்கு மாத காலத்திற்குள் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாற்றிவிட வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்துஸ்தான் புளுரோ கார்பன், இந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட், எச்எல்எல் லைப் கேர், சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ், பிரிட்ஜ் அண்ட் ரூப் இந்தியா, நகர்நார் இரும்பு எஃகு ஆலை மற்றும் இந்தியா சிமிண்ட் கழகத்தின் பல்வேறு ஆலைகள் மற்றும் ஐடிடிசி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை அப்படியே ஒட்டுமொத்தமாக தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு விற்று விடுவது என்று தீர்மானித்து அதற்கான ஒப்புதல் பெறுவதற்கான முன்மொழிவுகளை நிதி ஆயோக் உருவாக்கி இருக்கிறது.இந்த நிறுவனங்கள் 2017-18 ஆகிய ஆண்டுகளிலேயே பங்குகள்விற்பனை மற்றும் நிறுவனங்களை மொத்தமாக விற்றுவிடுவது என தீர்மானித்து அனுமதி அளிக்கப் பட்டிருந்தாலும் ஊழியர்களின் தொடர்ச்சியான எதிர்ப்பு மற்றும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வலுவான போராட்டங் களின் காரணமாக அரசின் நாசகரத் திட்டம் தடுத்துநிறுத்தப்பட்டு வந்துள் ளது. குறிப்பாக தமிழகத்தில் சேலம்இரும்பு எஃகு ஆலை தனியார்மயமுயற்சிக்கு எதிராக சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள், அனைத்து எதிர்க்கட்சிகள் கடு மையானப் போராட்டத்தை நடத்தின என்பது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் மீண்டும் இந்த ஆண்டுதீவிரமான தனியார்மய முயற்சியில் நிதி ஆயோக்கும் மத்திய நிதி அமைச்சகமும் இறங்கியுள்ளன.மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள்தவிர, மேலும் சில நிறுவனங் களை நிதி ஆயோக் குறி வைத்திருப்ப தாகத் தெரிகிறது. (பிடிஐ)