tamilnadu

img

சேலம் உருக்காலை தனியார்மய எதிர்ப்பு இயக்கம்

அ.சவுந்தரராசன் எச்சரிக்கை

சென்னை, ஜூலை 18- அரசியல் கட்சிகளின் போராட்டமாக மாறினால்தான் சேலம் உருக்காலை தனியார்மயத்தை தடுக்க முடியும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். சேலம் உருக்காலையைத் தனி யாரிடம் தாரைவார்க்கும் முடிவைக் கைவிடக் கோரியும், தமிழக அரசு வலுவாக இதில் தலையிடக் கோரி யும் சிஐடியு, எல்.பி.எப், பி.எம்.எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங் களின் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே அகில இந்திய தொமுச பேரவைத் தலைவர் வி. சுப்புராமன் தலைமையில் வியாழ னன்று (ஜூலை 18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அ.சவுந்தரராசன் பேசியதாவது:   தனியாருக்கு, கார்ப்ரேட் நிறு வனங்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது மத்திய அரசு. அதன் ஒருபகுதிதான் சேலம் உருக்காலையைத் தனியாரிடம் தாரைவார்க்கும் முயற்சி. அதானி யும், அம்பானியும் அங்கிருக்கக் கூடிய 4 ஆயிரம் ஏக்கர் நிலங் களைக் கைப்பற்றி அவர்கள் தொழில் செய்வார்களோ அல்லது ரியல் எஸ்டேட் நடத்துவார்களோ தெரியாது. தொழிற்சாலை வந்தால் வேலை கிடைக்கும் என்பதற்காகத்தான் விவசாயிகள் அடிமாட்டு விலை க்கு தங்கள் நிலங்களை வழங்கி னார்கள்.  இப்போது அந்த தொழிற் சாலையை லாபகரமாகச் செயல்படவிடாமல் ஆட்சி யாளர்கள் தடுத்துக் கொண்டிருக் கிறார்கள். அனைத்து பொதுத்துறை  நிறுவனங்களையும் அரசு திட்டமிட்டே சீரழித்து வருகிறது.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை பயன்படுத்தி உற்பத்தி செய்யக் கூடிய தொழிற்பேட்டையை அங்கே  உருவாக்கியிருந்தால் லாபமும் கிடைத்திருக்கும்,  வேலை வாய்ப்பும் பெருகியிருக்கும். அதேபோல் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்திருக்கலாம். அதன்மூலம்  ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தி அதிகரித்திருக்கும். இவ்வளவு வாய்ப்பிருந்தும் அதைச் செயல்படுத்தாமல் நஷ்டம் என்று கூறுவதற்குக் காரணம், அந்த நிறுவனத்தை தனியாருக்குத் தாரைவார்ப்பதற்காகத்தான்.  சேலம் உருக்காலை துவங்கு வதற்கு முன்பு  ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் முற்றிலுமாக இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆலை துவங்கிய பின்பு இறக்கு மதி குறைந்தது. அது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பலனை அளித்தது. இப்போது இதை லாபகரமாக இயக்குவதற்கு என்ன வழி இருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். தொழிற் சங்கங்களை அழைத்து எப்படி லாபம் ஈட்டுவது என ஆலோசனை நடத்துங்கள். அங்கே ஒரு மினி பவர் பிளாண்டையும், தொழிற் பேட்டையையும் உருவாக்கினால் லாபம் கிடைக்கும். மேலும் ஆயி ரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மத்திய அரசு இதைச் செய்ய மறுக்குமேயானால் தொழிற்சங்க போராட்டமாக நடைபெற்றுக் கொண்டிருப்பது அரசியல் கட்சி களின் போராட்டமாக மாறும். சேல த்தில் கடையடைப்பு போராட்டத்தை முதற்கட்டமாகத் துவங்கி, மாநிலம் முழுவதும் பல்வேறு வடிவிலான போராட்டங்களை அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும்.  இவ்வாறு அ.சவுந்தரராசன் பேசினார்.

கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில், “தமிழ் நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனம் சேலம் உருக்காலை. தனியார் முதலாளிகள் இன்று விவ சாயிகளிடம் இருந்து 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வாங்க முடியுமா? அரசு நிறுவனத்திற்கு என்பதால் தான் விவசாயிகள் நிலங்களை வழங்கி னார்கள். அந்த நிலங்களை விற்க இவர்களுக்கு உரிமையில்லை. நெய்வேலியில் 10 விழுக்காடு தனியாரிடம் விற்பனை என்ற போது அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்ததால்தான் அரசு அந்த விற்பனை முடிவைக் கைவிட்டது. மீண்டும் அனைத்து அரசியல் கட்சி களும் ஒன்றிணைந்து தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்தால்தான் மத்திய அரசு தனது கொள்கையை மாற்றிக் கொள்ளும்” என்றார்.  இப்போராட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் இரா.ராஜேந்திரன், தொமுச பொருளாளர் நடராஜன், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், காங்கி ரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு, பிஎம்எஸ் தென் பாரத அமைப்புச் செயலாளர் எஸ். துரைராஜ், ஐஎன்டியுசி துணைத் தலைவர் ஆர்.பி.கே.முருகேசன்,  விசிக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஆயி ரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.